ICCUnder19WorldCup2024 : இன்று நடைபெறும் 3 போட்டிகள்!
நேற்று ஜனவரி (19) 2 போட்டிகள் நடைபெற்றது. ஒரு போட்டியில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும், மற்றோரு போட்டியில் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது.
இதில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும் மோதிய போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதைப்போலவே, தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்றது.
அந்த போட்டிகளை தொடர்ந்து இன்றயை தினமான ஜனவரி 20-ஆம் தேதி 3 போட்டிகள் நடைபெறவுள்ளது. எந்தெந்த அணிகள் எல்லாம் இன்று விளையாடவுள்ளது என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசம் vs இந்தியா
இன்று நடைபெறவுள்ள ICC Under 19 World Cup 2024 தொடரின் 3-வது போட்டியில் வங்காளதேசம் அணியும் இந்திய கிரிக்கெட் அணியும் ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் மோதுகிறது.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்
- ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன்(கேப்டன்), பிரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், முருகன் அபிஷேக், ஆரவெல்லி அவனிஷ்(விக்கெட் கீப்பர்), நமன் திவாரி, ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே, ஆராத்யா சுக்லா, இன்னேஷ் மகாஜன், தனுஷ் கவுடா ருத்ரா படேல், பிரேம் தேவ்கர், முகமது அமான், அன்ஷ் கோசாய்
- ஸ்காட்லாந்து vs இங்கிலாந்து
4-வது போட்டியில் ஸ்காட்லாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் இருக்கும் சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
5-வது போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதிக்கொள்கிறது. இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி இன்று கிழக்கு லண்டனில் அமைந்து இருக்கும் Buffalo மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மூன்று போட்டிகளும் மதியம் 1.30 க்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.