திமுக மாநாட்டில் பாதுகாப்புக்காக சென்ற காவலர் தற்கொலை முயற்சி… சேலத்தில் பரபரப்பு… !
3 முறை ஒத்தி வைப்புக்கு பிறகு திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள், பாதுகாப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்காகப் பிரம்மாண்டமான அரங்கங்கள், வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்க உள்ளனர். அத்துடன் 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பாதுகாப்புப் பணிக்காக காவலர்கள் சேலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கே.கே.சத்திரம் காவல் நிலையத்திலிருந்து 31 வயது ராஜா என்ற காவலரும் சேலம் சென்றுள்ளார். காவலர்கள் அனைவரும் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராஜா திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார்.