மொறு மொறு ரவா பூரி: இப்படி செய்யுங்க
ஒரு முறை ரவா பூரி, இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா – 1 கப்
மெல்லிய ரவை – 1 கப்
நெய்- கால் கப்
பால் – அரை கப்
எண்ணெய்
உப்பு
செய்முறை : ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு நொய்யை உருக்கி, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரெட் தூள் போல் செய்து, பாலை விட்டு கெட்டியாக பிசையவும். வேண்டும் என்றால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். 15 நிமிடங்கள் ஊறிய பின் சிறிது கனமான பூரியாக இட்டு, பெரிக்கவும்.