பிரித்தானியத் தெருக்களில்…. இந்த மூன்று நாடுகளால் ஆபத்து: பயங்கரவாத தடுப்பு அதிகாரி எச்சரிக்கை

பிரித்தானியத் தெருக்களில் குற்றச்செயல்களை ஊக்குவிக்க ஈரான், சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் கயவர்களை களமிறக்கலாம் என்று பயங்கரவாத தடுப்பு பொலிசாரின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பங்கை நிராகரிக்க முடியும்
குறித்த நாடுகள் தங்கள் சார்பாக கயவர்களை களமிறக்கிவிட்டு, தங்கள் பங்கை நிராகரிக்க முடியும் என்றும் மாநகர பொலிஸ் உதவி கமிஷனர் Matt Jukes தெரிவித்துள்ளார்.
அந்த மூன்று நாடுகளும் பெருந்தொகை செலவிட்டு பிரித்தானியாவில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்று வருவதாகவும், இந்த விவகாரத்தில் நிதானமாக இருக்க விரும்பவில்லை என்றும், ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் 33 பேர் கைது
இந்த மூன்று நாடுகளும் பணத்தை செலவிட்டு, இப்படியான செயல்களை பிற நாடுகளில் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஈரானால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் 15 வழக்குகள் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அமெரிக்க மண்ணில் அங்குள்ள குடிமக்களை கொலை செய்யும் ஈரானின் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் சாத்தியமான பயங்கரவாத குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியாவில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.