சுவிட்சர்லாந்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்: சிக்கியது எப்படி?

பிரித்தானிய சகோதரர்கள் இருவர், சுவிஸ் அருங்காட்சியகம் ஒன்றில் பல மில்லியன் மதிப்புள்ள கலைப்பொருட்களைக் கொள்ளையடித்து சிக்கிக்கொண்ட நிலையில், தங்கள் கடனை அடைப்பதற்காக தாங்கள் கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள்.

சுவிஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்

பிரித்தானிய சகோதரர்களான Stewart Ahearne (45) மற்றும் Louis Ahearne (34), 2019ஆம் ஆண்டு, ஜெனீவாவிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்குள் நுழைந்து, விலைமதிக்கமுடியாத, 14ஆம் நூற்றாண்டு கால கலைப்பொருட்கள் சிலவற்றைக் கொள்ளையடித்தார்கள்.

சிக்கியது எப்படி?

முன்கூட்டியே திட்டமிட்டு, முகமூடியும், கையுறைகளும் அணிந்து, கதவில் துவாரமிட்டு உள்ளே சென்று, ஜாடிகளைக் கொள்ளையடித்து வெளியே வர அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் மிகவும் குறைவு.

கைரேகை உட்பட எந்த அடையாளத்தையும் விடாமல் கவனமாக கொள்ளைச் சம்பவத்தை நிறைவேற்றிவிட்டு, கதவு துவாரம் வழியாக வெளியே வரும்போது, அவர்களில் ஒருவருடைய வயிற்றில் கதவு கீறியிருக்கிறது.

பிரித்தானிய பொலிசார் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளைப் பார்வையிடும்போது, அதில் சிக்கிய ஒரு நபர் Louis Ahearne, அதாவது Stewartஇன் தம்பி என்பதை அவர்கள் கண்டுபிடிக்க, அவர்கள் லண்டனிலிருந்து ஜெனீவாவுக்கு பயணித்தது, ஜெனீவாவில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்தது, திருடப்பட்ட ஜாடிகளில் ஒன்றை ஹொங்ஹொங்குக்குக் கொண்டு சென்று விற்றது என அனைத்து விவரங்களும் கிடைத்துள்ளன.

வகையாக சிக்கிய கொள்ளையர்கள்

கொள்ளையடிக்கப்பட்ட ஜாடிகளை விற்க சகோதரர்கள் முயற்சி செய்துகொண்டிருக்க, அதைப் பயன்படுத்திக்கொண்டு, பிரித்தானிய பொலிசார் சிலர் தங்களை கலைப்பொருட்கள் வாங்குபவர்கள் போல காட்டிக்கொண்டு சகோதரர்களை தொடர்புகொண்டுள்ளார்கள்.

உணவகம் ஒன்றில் அனைவரும் சந்திப்பது என முடிவு செய்யப்பட்ட நிலையில், உணவகத்துக்குள் மாறுவேடத்திலிருந்த பொலிசார் Stuartஉடன் பேசிக்கொண்டிருக்கும்போது, கொள்ளையர்களின் கூட்டாளிகளில் ஒருவரான Leslie Mbaki Nkhwa என்பவர், பெரிய சூட்கேஸ் ஒன்றில் சுமார் 3 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய அந்த ஜாடியுடன் ஹொட்டலுக்குள் நுழைவதைக் கண்டதும், ஹொட்டலுக்கு வெளியே நின்ற பொலிசார், அவர் பின்னாலேயே சென்று, அவர் அந்த ஜாடியை வாங்க வந்த மாறுவேடத்திலிருந்த பொலிசாரிடம் அவர் ஜாடியை ஒப்படைத்ததும், அவரையும் Stuartஐயும் கைது செய்துள்ளார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *