என்ன அயலான் ஹீரோயின் கையே ஏலியன் போல மாறிடுச்சு.. தீயாக பரவும் ரகுல் ப்ரீத் சிங் பிக்ஸ்!
சென்னை: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான அயலான் திரைப்படம் தனுஷின் கேப்டன் மில்லரை வசூலில் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேறி வருவதாக கூறுகின்றனர்.
பல திரையரங்குகளில் கேப்டன் மில்லர் படத்தை தூக்கி விட்டு அயலான் படத்தை போட்டு வருகின்றனர். அதே போல பெரிய திரைகளில் அயலான் படமும் சின்ன திரைகளில் கேப்டன் மில்லர் படத்தையும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் மாற்றி உள்ளன.
அருண் விஜய்யின் மிஷன் பார்ட் 1 படத்துக்கு விமர்சனங்கள் நல்லா வந்தாலும் தியேட்டரில் அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதாக விருப்பம் தெரிவிக்கவில்லை. விஜய்சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் என்ன ஆனது என்றே தெரியாத அளவுக்கு இந்த பொங்கல் ரேஸில் அடி வாங்கி விட்டது என்கின்றனர். அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் அயலான் 2 எடுத்தால் மீண்டும் நடிக்க வருவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.