பல நோய்களுக்கு தீர்வு தரும் வாழை இலையில் ஜூஸ்.!
மர வகைகளில் ஒன்றான வாழை மரத்தில் இலை, காய், பழம், தண்டு, பூ என்று அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாகவும், உணவிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதிலும், குறிப்பாக வாழை இலையில் சாப்பிடுவது உடலுக்கும் பல நன்மையை தரும். இதன்படி வாழை இலையை ஜுஸாக செய்து குடித்து வருவதன் மூலம் பல நோய்கள் குணமாவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அதிகமாக ஆண்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ள வாழை இலையை ஜுஸ் செய்து குடித்து வந்தால் தலை முதல் கால் வரை பல்வேறு நன்மைகள் ஏற்படும். அதிலும், குறிப்பாக தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் வாழை இலையை ஜூஸ் செய்து குடித்து வர தோல் பொலிவாக மாறும். சரும வறட்சி, அலர்ஜி, தோல் வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.
இந்த வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாழை இலை ஜூஸ் அருமருந்தாக இருந்து வருகிறது. செரிமான கோளாறு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மலச்சிக்கல், கல்லீரல் பிரச்சனை உள்ளிட்டவற்றை வரவிடாமல் தடுக்கிறது. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு பிரச்சனையை கட்டுபடுத்த உதவுகிறது.
அதிலும் முக்கியமாக வாழை இலை ஜூஸில் பாலிப்பினைல்கள், பிளவனாய்டுகள் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் உள்ளதால், புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அழிப்பதற்கு பெரிதும் உதவி புரிகிறது. இவ்வாறு, பல்வேறு நன்மைகளை உடைய வாழை இலையை ஜூஸாக எடுத்துக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோயை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.