இயற்கை மூலிகைகளின் மகத்தான மருத்துவ குணங்கள்.!
* ஜீரணக் கோளாறு, காய்ச்சல், இரும்பல், காது வலி போன்றவற்றை குணப்படுத்துவதற்கு துளசி பெரிதும் உதவுகிறது.
துளசி ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
* எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அருகம்புல் உள்ளது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அருகம்புல் சாப்பிட வேண்டும். இதை நன்றாக பசி எடுக்கும் பொழுது சாப்பிட வேண்டும். பசி எடுத்தவுடன் அருகம்புல் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஏதாவது பழங்கள் சாப்பிட்டால் போதும். உடலில் ஏற்படும் பல்வேறு வகையான வேதியியல் மாற்றங்களை அருகம்புல் சீராக்கும்.
* உடல் எடையை குறைக்க உடலில் உள்ள கொழுப்புகள் குறைக்க, ரத்த புற்று நோய் குணமடைய அருகம்புல் மிக முக்கியமானதாக உள்ளது.
* தோல் தோல் வியாதிகளை குணப்படுத்தும், பசியை தூண்டும் கொத்தமல்லி இலை பித்தத்தை குறைக்கும். காய்ச்சல், இரும்பல், சளி, வாதம், நரம்பு தளர்ச்சி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
* ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் கல்லடைப்பு வலி போன்றவற்றிற்கு அருமருந்தாக உள்ளது. கொத்தமல்லி இலை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மனவலிமை அதிகரிக்கும். மன அமைதி தூக்கமின்மை, வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் போன்றவை குறையும்.
* கருவேப்பிலை பேதி, சீதபேதி, காய்ச்சல், ஈரல் கோளாறு போன்றவற்றை குணப்படுத்தும். உடல் சூட்டை தணிக்கும். மேலும் கருவேப்பிலை மனதுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். பித்தம் அதிகரிப்பதால் உண்டாகும் வைத்தியத்தை கருவேப்பிலை குணப்படுத்த உதவுகிறது.