உயர் இரத்த அழுத்தமா? கருப்பு மிளகை இப்படி பயன்படுத்துங்க.. நிவாரணம் கிடைக்கும்
உணவின் சுவையையும், நறுமணத்தையும், குணத்தையும் மேம்படுத்துவதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானது. பல வகையான மசாலாக்களால் உருவாக்கப்படும் பண்டங்கள் நம் பசித்த வயிற்றுக்கு விருந்தாகின்றன. நாம் பயன்படுத்தும் மசாலாக்களில் மிளகும் ஒன்றாகும். உணவின் சுவையை அதிகரிப்பதுடன் இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. மிளகின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
கருப்பு மிளகு
இந்தியாவில், பழங்காலத்திலிருந்தே மருந்துகளுக்கு மாற்று மருந்தாக மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல நோய்களைக் குணப்படுத்த மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படும் கருப்பு மிளகில் (Black Pepper) சில மருத்துவ கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டாறியப்பட்டுள்ளது. அதாவது அவை உடலின் செல்களைப் பாதுகாக்கின்றன. மேலும், கருப்பு மிளகு இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகின்றன. இது இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
ஊட்டச்சத்துகள் நிறைந்த மிளகு
கருப்பு மிளகில் (Pepper) பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இதில் உள்ளன. இது தவிர வைட்டமின் ஏ, ஈ, சி ஆகியவையும் கருமிளகில் உள்ளன. இதுமட்டுமின்றி, கருப்பு மிளகு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என்று அழைக்கப்படும் சில கூறுகளையும் கொண்டுள்ளது. அவை நமது செல்களைப் பாதுகாக்கின்றன. இதன் காரணமாக கருப்பு மிளகு பல நோய்களை சரி செய்ய உதவுகிறது. மேலும், இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, தொண்டை வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. கருப்பு மிளகை சாப்பிடுவதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்
உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) என்பது இந்நாட்களில் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இது பெரும்பாலும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் கருப்பு மிளகு, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ஒரு பாதுகாப்பான மற்றும் இயற்கையான வழியாகும்.