வெற்றிலைகளில் இவ்வளவு நன்மைகளா? வாங்க பார்க்கலாம்.!
* இலை வகையான வெற்றிலையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிடும்போது மூட்டுவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாது.
மேலும், வாயுத்தொல்லை, சளி தொடர்பான பிரச்னைகளும் ஏற்படாது.
* அணைத்து விஷேச இடங்களிலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் விஷேச இடங்களில் சாப்பிடும் போது செரிமான பிரச்னைகள், ஆஜீரண கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்படாது.
* மேலும், மலச்சிக்கல் பிரச்னைகள் இருக்காது. சுத்தமான வெற்றிலையை காம்பு கிள்ளி எடுத்து, உணவு சாப்பிட்ட பிறகு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இதை எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
இதை சாப்பிடும்போது ரத்த ஓட்டம் சீராகும், எலும்புகளுக்கு உறுதி கிடைக்கும். மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் இருக்காது. எலும்பு மஞ்ஜைகளுக்கு வலு கிடைக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரும். ரத்ததை சுத்திகரிக்கும். வாய்துர்நாற்றத்தை போக்கும்.