உனக்கு ஆசை இருந்தா சொல்லு.. நானும் அதை செய்றேன்.. விஜயகாந்த் மகனுக்கு விஷால் வலியுறுத்தல்.!!!
நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் கலந்து கொடு பேசினார். அப்போது வாய்ப்பு தேடி வந்த உதவி இயக்குனர்களுக்கு உணவளித்தவர் என கூறினார்.
பின்னர் சண்முக பாண்டியனிடம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசை இருந்தால் சொல்லு நான் வருகிறேன் என கூறியுள்ளார். என்னை பயன்படுத்திக்கொள்ள உனக்கு விருப்பம் இருந்தால் நானும் உன்னுடன் தூணாக இருந்து படத்தில் நடித்து தருகிறேன் என தெரிவித்துள்ளார்.