Sundar C Networth: காமெடி கிங்… மினிமம் கியாரண்டி இயக்குநர் சுந்தர் சி-யின் சொத்து மதிப்பு!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்த சி, இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். காமெடி படங்கள் மூலம் மினிமம் கியாரண்டி இயக்குநராக வலம் வரும் சுந்தர் சி-யின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
சுந்தர் சி சொத்து மதிப்பு
இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த சுந்த சி, 1995ம் ஆண்டு வெளியான முறை மாமன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமனார். ஜெயராம், கவுண்டமணி, குஷ்பூ நடித்திருந்த இந்தப் படம், காமெடியில் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தது. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த சுந்தர் சி, 28 ஆண்டுகளாக தயாரிப்பாளர்களின் இயக்குநராக வலம் வருகிறார்.
முறை மாப்பிள்ளை, சூப்பர் டூப்பர் ஹிட் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உன்னை தேடி, அன்பே சிவம், வின்னர், தலைநகரம், அரண்மனை என 90 முதல் 2கே கிட்ஸ் ரசிகர்கள் வரை தனது காமெடியால் வசீகரித்திருந்தார். மினிமம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட நாட்களுக்குள் படங்கள் இயக்குவதில் கில்லாடியான சுந்தர் சி, தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கொடுத்துவிடுவார்.
இதனால் தான் இப்போது வரையும் சுந்தர் சி-யின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு என சுந்தர் சி-யின் காமெடி கூட்டணி ரசிகர்களுக்கு எப்போதுமே ஃபேவரைட் தான். முக்கியமாக உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்திக் – கவுண்டமணி காமெடியும், வின்னர் படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள காமெடியும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் போரடிக்காது.