Ayalaan VS Captain Miller: திடீரென வசூலில் உச்சம் தொட்ட அயலான்… தடுமாறும் கேப்டன் மில்லர்!
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாகின.
கடந்த வாரம் 12ம் தேதி ரிலீஸான இந்த இரண்டு படங்களுக்கும் முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்தது. ரிலீஸாகி ஒரு வாரம் முடிந்துவிட்ட நிலையில், அயலான் வசூல் திடீரென உச்சம் தொட, கேப்டன் மில்லர் கலெக்ஷன் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாம்.
திடீரென வசூலில் உச்சம் தொட்ட அயலான்
இந்தாண்டு பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதின. அருண் விஜய்யின் மிஸன், விஜய் சேதுபதி இந்தியில் நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் படங்களும் பொங்கலுக்கு வெளியாகியிருந்தன. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் அயலான் – கேப்டன் மில்லர் இடையே தான் போட்டி நிலவியது.
அதன்படி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. தனுஷின் நடிப்பு சூப்பராக இருந்தாலும், இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. முக்கியமாக முதல் நாளில் கிடைத்த சூப்பரான ஓபனிங் அடுத்தடுத்த நாட்களில் இல்லாமல் போனது. சரியான கதை இல்லாமல், ஆக்ஷனும் அதிகம் இருந்ததால் தான் கேப்டன் மில்லர் தடுமாறி வருகிறது.
அதேநேரம், சிவகார்த்திகேயனின் அயலான் முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் மூவியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கதை கொஞ்சம் பழையதாக இருந்தாலும், திரைக்கதை, விஷுவல் எபெஃக்ட்ஸ், கிராபிக்ஸ் என சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் புதிய அனுபவத்தை கொடுத்தது அயலான். இதனால் இந்தப் படத்துக்கு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே சென்றது.