நடிகை ஷகீலா மீது வளர்ப்பு மகள் கொடூர தாக்குதல்.. பரபரக்கும் தலைநகர்… !
பான் இந்திய மொழிகளில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷகிலா. இவர் சமீப காலமாக யூ-டியூப் சேனல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இவருக்கு தென்னிந்திய திரைப்படங்களில் ரசிகர்கள் ஏராளம். இவர் தற்போது ஷகிலா, சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது வளர்ப்பு மகள் ஷீத்தலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஷகிலாவை, ஷீத்தல், அவரது தாய் சசி, சகோதரி ஜமீலா ஆகியோர் தாக்கியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை சமாதானப்படுத்த முயன்ற ஷகிலாவின் வழக்கறிஞர் செளந்தர்யா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த செளந்தர்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனது அண்ணன் மகளான ஷீத்தலை 6 மாத கைக்குழந்தையிலிருந்து ஷகீலா வளர்த்து வருகிறார்.