பெங்களூரில் கலக்கிய ராமேஸ்வரம் கபே இப்போ ஹைதராபாத்-க்கு விரிவாக்கம்.. 100 கோடி டார்கெட்-ஆ..!!

பெங்களூரில் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கபே இப்போது ஹைதராபாத்தில் புதிய கிளையை விரித்துள்ளது. ராமேஸ்வரம் கபே இணை நிறுவனர்கள் ராகவேந்திர ராவ், திவ்யா ராகவேந்திர ராவ் தங்களது இந்த புதிய கடை பெங்களூர் கடைகளை போலவே மிகவும் சிறப்பாக செயல்படும் தீவிரமாக நம்புகின்றனர்.
இன்றைய வர்த்தக துறையில் ஹோட்டல் வைத்து வெற்றி பெறுவது என்பது பெரும் சவால் நிறைந்தது.
இந்த நிலையில் வர்த்தகத்தை துவங்கி 3 வருடத்திலேயே பெங்களூரில் 4 -5 கிளைகள் மூலம் 50 கோடிக்கு பிஸ்னஸ் செய்வது மட்டும் அல்லாமல் இணையத்தில் பெரிய அளவில் டிரெண்டாகியுள்ளது. பெங்களூரில் இந்திரா நகர், ஜேபி நகர், புரூக்ஃபீல்டு, ராஜாஜி நகரில் நான்கு கிளைகளை வைத்துள்ள ராமேஸ்வரம் கபே இந்தியாவின் சிலிக்கான் வேலியான பெங்களூரில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டில் இரண்டு கிளைகளுடன் ராமேஸ்வரம் கபே தொடங்கப்பட்டது.
இதைச் செய்வதற்கு பத்தாண்டுகளாக யோசித்ததாக ராகவேந்திர ராவும் திவ்யா ராகவேந்திர ராவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டில் ராமேஸ்வரம் கபே பல கோடிகளை சம்பாதித்துள்ளது. மாஸ்டர் செப் ஆஸ்திரேலியா டிவி ஷோவின் முன்னாள் நடுவர் காரி மிச்சிகன் ராமேஸ்வரம் கபேக்கு வந்து காபி அருந்திவிட்டு மனமாற பாராட்டி விட்டுச் சென்றுள்ளார்.10க்கு 10 ரூம்.. மாதம் 4.5 கோடி வருமானம்.. பெங்களூரை அசத்தும் Rameshwaram Cafe..! ராமேஸ்வரம் கஃபே ஜனவரி 19, 2024 அன்று மாதப்பூரில் உள்ள ஹைதராபாத் டெக் சென்டரில் வாடிக்கையாளர்களுக்காகத் திறக்கப்படும்.
இணை நிறுவனர்களான ராகவேந்திர ராவ் மற்றும் திவ்யா ராகவேந்திர ராவ், ராமேஸ்வரம் கஃபே வருவாய், தோற்றம் மற்றும் விற்பனை நிலையங்கள் குறித்து பேசினர். ராமேஸ்வரம் கஃபே அதன் பாரம்பரிய தென்னிந்திய காலை உணவுகளான நெய் பொடி இட்லி, மசாலா தோசைக்கு பெயர் பெற்றது. இந்த உணவகம் மாதத்துக்கு ₹4.5 கோடி வருமானம் ஈட்டுவதாகவும், ஆண்டுக்கு ₹50 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.பெங்களூரே வியந்த ராமேஸ்வரம் கஃபே..10X10 கடையில் மாதம் 4.5 கோடி சம்பாதிக்கும் மிடில் கிளாஸ் பெண்..!!இந்திராநகரில் வசிப்பவர்கள் பலமுறை புகார் அளித்ததைத் தொடர்ந்து பிபிஎம்பி ராமேஸ்வரம் கபேயை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *