புலி வால் பிடித்த கதையான தங்கம்.. விடவும் முடியல, அதிகமாக வாங்கவும் முடியல..!!
தங்க கையிருப்பு ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, குறிப்பாக நிதி நிச்சயமற்ற காலங்களில் நம்பகமான மூலதனமாகத் தங்கம் இருக்கிறது.
உதாரணமாகக் கொரோனா தொற்றுக் காலத்தில் பங்குச்சந்தை, பத்திர சந்தை, நாணய சந்தை அனைத்தும் சரிவில் இருக்கும் போது தங்கம் மட்டும் உயர்வாக இருந்தது.இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளின் அரசு தனது கையிருப்பில் இருந்த தங்கத்தை விற்பனை செய்து தனது நாணய மதிப்பீட்டையும், நாட்டின் பணப்புழக்கத்தையும் ஈடு செய்தது.
இதனால் தங்கம் நாட்டுக்கும் சரி, வீட்டுக்கும் சரி ரொம்ப நல்லது. 1800களின் பிற்பகுதியிலும், 1900களில் உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தங்கத் தரநிலை இன்றும் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தங்களுடைய காகித நாணயத்தின் மதிப்பை சர்வதேச அளவில் நிலை நிறுத்த, தங்களுடைய நாணயத்திற்கும் தங்கத்திற்கும் இடையே நிலையான மாற்று விகிதத்தை நிர்ணயிப்பதன் மூலம் இது சாத்தியப்படுகிறது.
இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் மொத்தமாகக் குறையும் வரையில், உலக நாடுகள் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கும், தொடர்ந்து தங்கம் விலை உயரும். இல்லையெனில் தங்கம் போல மாற்று சொத்து நிலையான மதிப்பீட்டை உலக அரங்கில் உருவாக்க வேண்டும். அப்போது தங்கத்தின் ஆதிக்கம் குறையும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று நடக்க வேண்டும்.உலக நாடுகள் தங்கத்தை வாங்குவதை 1970 களில் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்ட போதிலும், பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக இன்று வரையில் தங்க இருப்பை அதிகரிப்பதை முக்கிய இலக்காக உள்ளது. இதனால் சர்வதேச பொருளாதாரத்தில் தங்கம் புலி வால் பிடித்த கதையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் உலகில் அதிகத் தங்க இருப்பைக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலையும், உலக நாடுகள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறது என்பதையும் இப்போது பார்ப்போம்.அமெரிக்க அரசிடம் 8,1336.46 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது.ஜெர்மனியில் 3,352.65 டன் தங்கம் இருப்புக் கொண்டு டாப் 10 பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.இத்தாலி 2,451.84 டன் தங்கம் கையிருப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளதுபிரான்ஸ் அரசிடம் 2,436.88 டன் தங்கம் கையிருப்பு உள்ளது2,332.74 டன் தங்கம் இருப்புடன், ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது.சீனா அரசு 2,191.53 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது.சுவிட்சர்லாந்தில் 1,040.00 டன் தங்கம் கையிருப்பு உள்ளதுஜப்பானில் 845.97 டன் தங்கம் கையிருப்பு உள்ளது800.78 டன் தங்கத்துடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளதுநெதர்லாந்தில் 612.45 டன் தங்கம் கையிருப்பு உள்ளது