அரிச்சல்முனையில் மோடி மலர்கள் தூவி வழிபாடு… வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு… !
நாளை ஜனவரி 22ம் தேதி திங்கட்கிழமை உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனையடுத்து பிரதமர் மோடி 11 நாட்கள் மிகக் கடுமையான விரதத்தை கடைப்பிடித்து வருகிறார்.
வெறும் தேங்காய் தண்ணீர் மட்டும் குடித்து தரையில் படுத்துறங்கி வருகிறார். வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவுகளை மட்டுமே உண்டு வருகிறார். அத்துடன் இந்தியாவின் முக்கிய ஆலயங்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அதன்படி,நேற்று திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த மோடி இன்று தனுஷ்கோடி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார்.
தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்து அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு இன்று தனுஷ்கோடி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டார்.
ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி முழுவதும் நேற்று பகல் 12 மணி முதல் இன்று பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்ட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, ராமேஸ்வரம் வழியாக தனது கார் மூலம் சாலை மார்க்கமாக அரிச்சல் முனையை சென்றடைந்தார். அங்கு மலர்களை தூவி பிரதமர் மோடி வழிபாடு செய்தார். ராமர் பாலம் கட்டப்பட்டதாக நம்பப்படும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மலர்கள், துளசி தூவி பிரதமர் வழிபாடு செய்தார். அத்துடன் அங்கு சிறிது நேரம் தியானம், சூரிய வழிபாடு செய்தார்.