எலும்புகளுக்கு வலிமை: இந்த ஆரோக்கியமான வடை செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
முளை விட்ட கொள்ளு – 200 கிராம்
கறுப்பு உளுந்து – 50 கிராம் (ஊற வைத்தது)
பச்சரிசி – 1 டீஸ்பூன் ((ஊற வைத்தது)
நறுக்கிய புதினா- தேவையான அளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு
கொத்தமல்லித் தழை- தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4
சின்ன வெங்காயம் – கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கேற்ப
சோம்பு- சிறிதளவு
எண்ணெய் – கால் கிலோ
செய்முறை
பாத்திரத்தில் கறுப்பு உளுந்து, அரிசி சேர்த்து கழுவி பின் நன்நீரை ஊற்றி 1 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கறுப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்க வேண்டும்.
இதில் கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவுக் கலவையை வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான கொள்ளு கருப்பு உளுந்து வடை ரெடி.