லட்சம் தொண்டர்களுக்கு தயாராகும் விருந்து : ஸ்பெஷல் உணவு பட்டியல் இதோ
சென்னையிலிருந்து கொண்டுவரப்படும் சுடர் ஒளியை ஏற்றி வைத்து மாநாட்டை துவைக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். 1.25 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மொத்தம் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.
காலையில் கருப்பட்டிக் கேசரி, முடக்கத்தான் தோசை, சிகப்பரிசி இட்லி போன்ற உணவுகள் வழங்கப்பட உள்ளது. அதுபோல் மதியத்தில் பன்னீர் பிரியாணி, சாம்பார் சாதம், பேபி கார்ன் 65, கதம்ப சாமார், தக்காளி ரசம், உருண்டை மோர் குழம்பு, வாழைப்பூ வடை உள்பட சைவ விருந்தும் பட்டியலில் உள்ளது. இதுபோல மட்டன் பிரியாணி, சிக்கன் 65, எண்ணெய் கத்திரிக்காய் தொக்கு, பிரட் அல்வா சமைக்கப்படுகிறது. ஐஸ்கிரீம், பழம், பீடாவும் கடைசியாக வழங்கப்பட உள்ளது.