CSK : மன்றாடிய சிஎஸ்கே.. அசிங்கப்படுத்திய ஐசிசி.. எதிரி டீமுக்கு அடித்த மெகா ஜாக்பாட்
அந்த அணிக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) ஒரு கோரிக்கையை வைத்தது சிஎஸ்கே அணி நிர்வாகம். ஆனால், அதை மறுத்த ஐசிசி, மும்பை இந்தியன்ஸ் அணி நடத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 தொடரில் இந்த இரண்டு அணிகளும் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பல விஷயங்கள் தனது எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக நடக்கும் நிலையில், அமெரிக்காவிலாவது முன்னிலை பெறலாம் என நினைத்த சிஎஸ்கே அணிக்கு பின்னடைவே ஏற்பட்டு இருக்கிறது.
2024 டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் அங்கே உலகக்கோப்பை தொடரில் முக்கிய போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி உட்பட இந்திய அணி ஆடும் அனைத்து போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெற உள்ளன.
ஏற்கனவே அமெரிக்காவில் கிரிக்கெட்டை பரவலாக்க மேஜர் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அங்கே டல்லாஸ் என்ற நகரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை வைத்து டல்லாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், நியூயார்க் நகரில் உள்ள மைதானத்தை வைத்து மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும் தற்போது செயல்பட்டு வருகின்றன.
டல்லாஸ் நகரில் உள்ள மைதானம் சிறிய மைதானம் ஆகும். நியூயார்க் அமெரிக்காவின் முக்கிய நகரம் என்பதால் அங்கே பெரிய மைதானம் உள்ளது. அங்கே 34000 பேர் வரை அமர்ந்து போட்டிகளை காணலாம். அமெரிக்காவிலேயே அதுதான் பெரிய மைதானம் ஆகும். மேலும், அங்கு இந்தியர்கள் அதிகம் என்பதால் இந்தியா ஆடும் உலகக்கோப்பை போட்டிகளை அங்கே நடத்த முடிவு செய்தது ஐசிசி.