ஆர்சிபி முடிவு இதுதான்.. இப்போவே சிக்னலை கொடுத்துட்டாங்க.. கொடூரமான ஃபார்மில் இருக்கும் டூ பிளஸிஸ்!

பெங்களூர்: எஸ்ஏ20 லீக்கில் ஜேஎஸ்கே அணியின் கேப்டன் டூ பிளஸில் 4 போட்டிகளில் விளையாடி 32 ரன்கள் மட்டுமே சேர்த்திருப்பது, ஆர்சிபி அணி ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடர் இந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு ஐபிஎல் உரிமையாளர்கள் எஸ்ஏ20 லீக் தொடரிலும் முதலீடு செய்ததோடு, அதே பெயரினை அணிகளுக்கு சூட்டியதே காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே முன்னாள் வீரர் டூ பிளஸிஸ், தற்போது எஸ்ஏ20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இதுவரை ஜேஎஸ்கே அணி 5 போட்டிகளில் 3 தோல்வி, ஒரு வெற்றி, ஒரு போட்டி ரத்து என்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஜேஎஸ்கே அணியின் தோல்விக்கு அந்த அணியின் மோசமான பேட்டிங்கே முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக கேப்டன் டூ பிளஸிஸ் மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஒரு போட்டியில் கூட 10 ரன்களை கடக்கவில்லை.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள டூ பிளஸிஸ் 6, 7, 10 மற்றும் 9 என்று மொத்தமாக 32 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். எஸ்ஏ20 லீக் தொடருக்கு முன் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த லீக் போட்டிகளில் ஆட போவதாக கூறி இருந்தார். ஆனால் இந்த ஃபார்மில் ஆடினால் டூ பிளஸிஸ் நிச்சயம் ஜேஎஸ்கே அணியில் கூட தொடர்ந்து விளையாட முடியாது.

அதுமட்டுமல்லாமல் இன்னும் 2 மாதங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. ஆர்சிபி அணியின் கேப்டனாக உள்ள டூ பிளஸிஸ்-ன் பேட்டிங் ஃபார்ம் அந்த அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மினி ஏலத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்று விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது கேப்டனே மோசமான ஃபார்மில் இருந்து வருவது, இம்முறையும் “ஈசாலா கப் நஹி” தான் என்று புலம்ப தொடங்கியுள்ளனர். இதனால் ஆர்சிபி அணியின் கேப்டன்சியை மீண்டும் விராட் கோலி வசமே ஒப்படைக்கலாம் என்று சில கருத்துகள் எழுந்துள்ளது. இருந்தாலும் டூ பிளஸில் அதே ஃபிட்னஸ் உடன் இருப்பதால், நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *