ஒரே நாளில் இரண்டு இடங்களில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாப பலி..!

முதல் விபத்தில், வெள்ளிக்கிழமை இரவு ஹெனான் மாகாணத்தின் யான்ஷான்பு கிராமத்தில் உள்ள யிங்காய் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 11 மணியளவில் பள்ளியில் தீ விபத்து குறித்து உள்ளூர் தீயணைப்புத் துறைக்கு எச்சரிக்கை கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் இரவு 11.30 மணியளவில் தீயை அணைத்தனர். தீ விபத்தில் காயமடைந்த ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். மற்றொரு சம்பவத்தில், சனிக்கிழமை அதிகாலை கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சாங்சூ நகரில் உள்ள ஒரு உற்பத்திப் பட்டறையில் ஏற்பட்ட தூசி வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 3.38 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாவட்டத்தின் அவசரகால முகாமைத்துவ திணைக்களத்தின் படி, எட்டு பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *