80-க்கும் மேற்பட்ட பெண்கள்.. இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களை குறி வைத்து மோசடி.. கொடூர இளைஞர் கைது..!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே இடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. மேட்ரிமோனி மூலம் அறிமுகமான சக்ரவர்த்தி என்ற வாலிபர், திருமணம் செய்து கொள்வதாக கூறி 20 பவுன் தங்க நகைகளை மோசடி செய்தார். இதுகுறித்து திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாந்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்படை போலீசார் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் சக்கரவர்த்தியை தேடி திருவிடைமருதூரில் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் என்பதும், 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும், சென்னையில் பொறியாளராக வேலை பார்ப்பதாக மேட்ரிமோனியில் கூறிக் கொண்டு , இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பெண்களை குறிவைத்து திருமணம் செய்து வருவதும் தெரியவந்தது.

பின்னர், அவர்களை ஏமாற்றி நகை, பணம் வாங்கி, அதன் மூலம் சொகுசு கார், நட்சத்திர ஓட்டல், மது என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அவர் மீது 8க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரொக்கம், கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது செல்போனை சோதனையிட்ட போது 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பல பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *