Appendix சிகிச்சைக்கு சென்ற பிரித்தானிய கல்லூரி மாணவி: குழந்தையை பெற்றெடுத்த விநோத சம்பவம்
பிரித்தானியாவில் அப்பெண்டிக்ஸ் சிகிச்சைகாக சென்ற பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பெண்டிக்ஸ் சிகிச்சைக்காக சென்ற பெண்
பிரித்தானியாவின் லீட்ஸ் பல்கலைக்கழக மையத்தில் நாடக கலையில் பட்டம் பயின்று வரும் மாணவி 21 வயது மாணவி நியாம் ஹியர்ன்(Niamh Hearn). இவர் சமீபத்தில் அப்பெண்டிக்ஸ்(Appendix) சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
ஆனால் அப்போது நியாம் ஹியர்னை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவருக்கு ஏற்பட்ட வலி கர்ப்பத்தின் காரணமாக ஏற்பட்ட பிரசவ வலி என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இதனால் கல்லூரி மாணவியான நியாம் ஹியர்ன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு லியாம்(Liam) என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2022ம் ஆண்டு நடந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த செய்தி வைரலாகி வருகிறது.
Cryptic Pregnancy
நியாம் ஹியர்ன் தனக்கு மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பது ஆகிய காரணங்களால் உடல் எடை அதிகரித்து வருவதாக நினைத்து கொண்டு இருந்துள்ளார். இவ்வகையான கருத்தரித்தலுக்கு Cryptic Pregnancy என்று அழைக்கப்படுகிறது.