ஜேர்மனியில் தீவிர வலதுசாரிக் கட்சியை தடை செய்ய ஆர்ப்பாட்டத்தில் குதித்த பொதுமக்கள்
ஜேர்மனியில் புலம்பெயர் மக்களை கொத்தாக வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் தீவிர வலதுசாரிக் கட்சி மூத்த உறுப்பினர்கள் சதியாலோசனை முன்னெடுத்த தகவல் வெளியான நிலையில், தொடர்புடையக் கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேசிய அளவில் இரண்டாவது இடம்
ஜேர்மனியில் AfD எனப்படும் தீவிர வலதுசாரிக் கட்சியானது தேர்தலில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. ஆனால் தற்போது எழுந்துள்ள இந்த எதிர்ப்பு நிலை என்பது எதிர்க்கட்சிகளால் ஏற்பட்டவை என விளக்கமளித்துள்ளது.
இந்த நிலையில் AfD நாடாளுமன்ற உறுப்பினர் Bernd Baumann தெரிவிக்கையில், நாடு முழுவதும் பீதி பரவுகிறது, உங்கள் பயத்தை எங்களால் உணர முடிகிறது என்றார். பெர்லின் அருகே ஒரு ஹொட்டலில் AfD கட்சி மூத்த உறுப்பினர்கள் உட்பட, சில தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் என மொத்தம் 20 பேர்கள் ரகசிய ஆலோசனை கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் சேன்சலரான Angela Merkel உட்பட CDU கட்சி உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்டுள்ளனர். மில்லியன் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுதல்,
ஜேர்மானிய மக்கள் அல்லாதோரையும், அவர்கள் வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை பெற்றிருந்தாலும், நாட்டைவிட்டு வெளியேற்றவும் சதியாலோசனை மேற்கொண்டுள்ளனர்.
ஒன்றுபட்டு உறுதியுடன் இருக்கிறோம்
இந்த செய்தி வெளியானதும், AfD கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், பெர்லின், Cologne மற்றும் Hamburg பகுதிகள் உட்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் குறைந்தது 300,000 பேர் பங்கேற்றதாக காவல்துறை மற்றும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். பிராங்பேர்ட்டில் சுமார் 35,000 பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.