இந்தியா மீதான வெறுப்பு: மாலத்தீவு ஜனாதிபதியின் முடிவால் பரிதாபமாக பறிபோன உயிர்

அவசர சிகிச்சைக்கு இந்திய விமானத்தை பயன்படுத்த தடை விதித்த மாலத்தீவு ஜனாதிபதியால், அந்த நாட்டு சிறுவன் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 வயது சிறுவனுக்காக

இந்தியாவின் HAL நிறுவனம் தயாரித்த குட்டி விமானம் ஒன்று, மனிதாபிமான அடிப்படையிலான அவசர தேவைகளுக்காக மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீவிர மருத்துவ உதவி தேவைப்பட்ட 14 வயது சிறுவனுக்காக அந்த விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுவன் மூளை கட்டி மற்றும் பக்கவாதத்தால் போராடி வந்துள்ளார். இந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக சிறுவனின் குடும்பத்தினர் அந்த விமானத்தை பயன்படுத்த அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.

புதன்கிழமை அந்த சிறுவன் பக்கவாதத்தால் அவதிப்பட, உடனடியாக தலைநகர் மாலிக்கு கொண்டு செல்லும் பொருட்டு சிறுவனின் பெற்றோர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் வியாழக்கிழமை பகல் வரையில் அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்பட்டுகிறது.

நீண்ட 16 மணி நேரம் தாமதமான நிலையில், சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வளாகத்தில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சிறுவனின் தந்தை தெரிவிக்கையில், புதன்கிழமை முன்வைத்த கோரிக்கைக்கு அவர்கள் வியாழக்கிழமை பகல் 8.30 மணிக்கு பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரைக் கொடுக்க வேண்டியதில்லை

இதனிடையே தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் சிறுவன் மாலி நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். தொடர்ந்து உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளான். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணமடைந்துள்ளான்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *