2 நாளில் இமாலய வசூல். கலெக்சனில் கலக்கும் சலார்.
சலார் படம் தொடர்பாக கலவை விமர்சனங்கள் வெளிவந்த நிலையில், அவற்றை அடித்து நொறுக்கும் வகையில் இந்த படம் வசூலை குவித்து வருகிறது. நேற்று முதல் நாள் வசூல் ரெக்கார்டை ஏற்படுத்திய நிலையில், 2 நாட்கள் மொத்த வசூல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.
கே.ஜி.எஃப் 1, 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் சலார் படத்தை இயக்கி இருப்பதால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. செப்டம்பர் மாதம் வெளிய வேண்டிய வெளிவர வேண்டிய இந்த திரைப்படம் கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக டிசம்பர் 22ஆம் தேதியான நேற்று முன்தினம் வெளியானது. அதற்கு முந்தைய நாளில் மற்றொரு எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஷாருக்கான் நடித்த டங்கி ரிலீஸ் ஆனது.
இதனால் சலார் திரைப்படத்திற்கு வட மாநிலங்களில் போதிய அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வெளிநாடுகளில் டங்கியை விடவும் சலார் படத்திற்கு அதிக வரவேற்பு இருந்ததால் திரையரங்குகள் அதிகம் கிடைத்தன. இதே போன்று தமிழ்நாட்டிலும் கணிசமான அளவு ரசிகர்கள் ரிலீசான நேற்று முன்தினம் சலார் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும்பாலானோர் கலவை விமர்சனங்களையே கொடுத்து வந்தனர். ஒரு சிலரை தவிர்த்து மெஜாரிட்டியான யூடியூபர்கள் சலார் படத்திற்கு நெகடிவ் விமர்சனத்தை கொடுத்திருந்தார்கள்.
…#SalaarCeaseFire dominates the global-box office, crossing . (worldwide) !#BlockbusterSalaar #RecordBreakingSalaar #SalaarRulingBoxOffice#Salaar #Prabhas #PrashanthNeel… pic.twitter.com/suEQftytyj
— Salaar (@SalaarTheSaga) December 24, 2023
இந்நிலையில் 2 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் சலார் திரைப்படம் ரூ. 295.7 கோடி அளவுக்கு வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், படம் ரிலீஸான நாளுக்கு இணையான வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.