Rajinikanth: குடியரசு தினத்தில் நடக்கும் லால் சலாம் மியூசிக் லான்ச்.. ரஜினியின் குட்டி ஸ்டோரி ரெடியா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம். அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது படம் இது.
இந்தப் படம் பொங்கலையொட்டியே ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், படத்தில் ரிலீஸ் தேதி தற்போது பிப்ரவரி 9ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போன நிலையில், இந்தப் படத்திற்கு பதிலாக தங்களுடைய மிஷன் சாப்டர் 1 படத்தை லைகா பொங்கலையொட்டி ரிலீஸ் செய்திருந்தது. இன்னும் சில தினங்களில் லால் சலாம் படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
லால் சலாம் படம்: 3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்தப் படத்தில் அவரது தந்தையும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் பொங்கலையொட்டி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பிப்ரவரி 9ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசை: படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் சூட்டிங் சென்னை, மும்பை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விளையாட்டை குறிப்பாக கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியான படங்கள், ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், லால் சலாம் படமும் அந்த வரிசையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.