Mahesh Babu: ராஜமெளலி மட்டுமே மகேஷ் பாபுவின் ஒரே நம்பிக்கை.. பாக்ஸ் ஆபிஸில் முன்னேறிய 4 நடிகர்கள்!
ஹைதராபாத்: தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டார் என போட்டுக்கொள்ளும் மகேஷ்பாபுவை பாக்ஸ் ஆபிஸில் நான்கு இளம் டோலிவுட் நடிகர்கள் பின்னுக்குத் தள்ளி முன்னேறி உள்ளனர்.
இந்த முறையாவது மகேஷ்பாபு தனது மாஸ் ஆக்ஷனை காட்டுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படத்தை ரொம்பவே நம்பி இருந்தார் மகேஷ் பாபு. ஆனால் அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது மகேஷ்பாபு ரசிகர்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் படம் எல்லாம் அசால்ட்டாக 200 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
முதல் இடத்தில் பிரபாஸ்: ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு படங்களில் நடித்த பிரபாஸ் தொடர்ந்து 400 முதல் 500 கோடி பட்ஜெட் படங்களின் நடித்து மிகப்பெரிய வசூல் நாயகனாக தெலுங்கு திரையுலகில் முன்னேறி உள்ளார். பாகுபலி படங்களுக்கு பிறகு பெரும் சரிவை சந்தித்தாலும் கடந்தாண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் பிரபாஸுக்கு சுமார் 700 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டிக் கொடுத்தது.
ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர்: பிரபாஸை தொடர்ந்து பான் இந்தியா நடிகர்களாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உருவாகியுள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய நிலையில், இருவரது மார்க்கெட்டும் தெலுங்கு சினிமாவில் அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர். இந்த ஆண்டு வெளியாக உள்ள ராம்சரனின் கேம் சேஞ்சர் மற்றும் ஜூனியர் என்டிஆரின் தேவரா உள்ளிட்ட 2 படங்களும் பெருந்தொகைக்கு பிசினஸ் ஆகி இருப்பதாக கூறுகின்றனர்.