Rajamouli: :கல்கி 2898 AD படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல இயக்குநர்.. அதிகரிக்கும் மாஸ்!
சென்னை: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கல்கி 2898 AD. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மே 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கமல்ஹாசன் பிரபாசுக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக அவர் சில தினங்களே கால்ஷீட் கொடுத்த நிலையிலும் 150 கோடி ரூபாய் வரை அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
முன்னதாக பொங்கல் பண்டிகையையொட்டி கல்கி 2898 AD படம் திரையரங்குகளில் ரிலீசாகவிருந்த நிலையில், படத்தின் சூட்டிங் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. முன்னதாக இந்தப் படத்திற்கு பிராஜெக்ட் கே என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கல்கி 2898 AD என்று பெயரிடப்பட்டது. பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகிவரும் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கல்கி 2898 AD: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 AD, இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பிரபாசுக்கு வில்லனாகியுள்ளார். இந்தப் படத்திற்காக அவர் சில தினங்களே கால்ஷீட் கொடுத்த நிலையில் அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தின்மூலம் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக களமிறங்கியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க இந்தக் காரணமும் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் முன்னதாக நடிகையர் திலகம் என்ற நடிகை சாவித்ரியின் பயோ-பிக்கை இயக்கியுள்ள நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
சயின்ஸ் பிக்ஷன் படம்: சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள இந்தப் படத்தினை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.