என் பேரு மீனாகுமாரி.. 38 வயதாகும் முமைத் கான்.. தோழியுடன் படுநெருக்கமாக இருக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
சென்னை: “என் பேரு மீனாகுமாரி” என கந்தசாமி படத்திலும் “என் செல்லப்பேரு ஆப்பிள்” என போக்கிரி படத்திலும் நடனமாடிய முமைத் கானை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
38 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் முமைத் கான் தோழி ஒருவருடன் படுநெருக்கமாக இருக்கும் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் முமைத் கான். 2004ம் ஆண்டு பாலிவுட் படத்தில் ஐட்டம் டான்சராக அறிமுகமான முமைத் கான் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
38 வயதான முரட்டு சிங்கிள்: மும்பையை சேர்ந்த முமைத் கானுக்கு 38 வயதாகிறது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தற்போது சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக கவர்ச்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். 38 வயதாகும் முமைத் கான் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.
ஐட்டம் டான்சர்: டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் ஐட்டம் டான்சராக கோலிவுட்டில் அறிமுகமானார் முமைத் கான். கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற “நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே” பாடல் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. தாமரை வரிகளில் உருவான துள்ளல் பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவியது. அந்த சமயத்தில், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் முமைத் கானுக்கு செம டிமாண்ட் ஏற்பட்டது.