நடிகர் சங்கத்தின் பணத்தை கொடுக்க மறுத்த MGR! சிவாஜியின் உழைப்பு பறிப்பு!
என்னதான் அண்ணன் தம்பிகளாக எம்ஜிஆர் சிவாஜி அவர்கள் இருந்தாலும், அரசியல் என்று வந்துவிட்டால் இருவருக்கும் மோதல்கள் இருந்து கொண்டு தான் இருந்தன.
சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது அவருடைய முயற்சியில் தான் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டப்பட்டது.
அப்பொழுது சிவாஜி கணேசன் அவர்களின் முயற்சியால் 1980களில் கடன் வாங்கப்பட்டது. வட்டியுடன் சேர்த்து மொத்தம் 20 லட்சங்கள் இருந்தன.
அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் நடத்தி வசூலிக்கப்பட்டது. அப்பொழுது முதல்வராக இருந்த எம் ஜி ஆர் அவர்கள் அரசு பணத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்துங்கள் என்று மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் விகே ராமசாமி அவர்களிடம் கூறினார்.
வசூல் ஆகும் பணத்தில் கடனை அடைத்து விட்டு மீதமுள்ள படத்தை அரசாங்கத்திற்கு கொடுத்து விடுங்கள் என்று சொல்லி உள்ளார்.
அப்பொழுது எம்ஜிஆரும் சிவாஜியும் இரு வேறு கட்சிகளில் இருந்ததால் எம்ஜிஆரின் மீது நடிகர் திலகம் ஏகப்பட்ட விமர்சனங்களை எடுத்து வைத்தார். அதனால் எம்ஜிஆருக்கு சிவாஜி மேல் கோபம் அதிகமாக இருந்தது.
ஏகப்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி மொத்தம் 1.5 கோடி வசூல் செய்தது. அதில் 5 லட்சம் ரூபாயை மட்டும் நடிகர் சங்கத்திற்கு கொடுத்துவிட்டு எம்ஜிஆர் மீதி பணத்தை எடுத்துக்கொண்டார்.
அப்பொழுது சங்க பொருளாளர் ஆக இருந்த விகே ராமசாமி அவர்கள் எவ்வளவு மன்றாடியும் எம்ஜிஆர் செவி சாய்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது.