Director Adhik Ravichandran: அஜித் கூட்டணியை முன்னதாகவே கணித்த தயாரிப்பாளர்.. உணர்ச்சிவசப்பட்ட ஆதிக்

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். வரும் பிப்ரவரி மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார்.

மார்ச் மாதத்தில் அஜித் தன்னுடைய ஏகே63 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தை சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இவர் முன்னதாக அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். நடிப்பு, இயக்கம் என பிசியாக உள்ள ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மார்க் ஆண்டனி என்ற டைம் டிராவல் படத்தை சமீபத்தில் கொடுத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்தே அடுத்ததாக அஜித்தின் ஏகே63 படத்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக்கிற்கு கிடைத்துள்ளது. இதன் முன்தயாரிப்பு பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார் ஆதிக். இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராகவும் உள்ள நிலையில், ஏகே63 படம் மிகச்சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்க்கலாம்.

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் இந்தப் படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் ஏறக்குறைய அசர்பைஜானிலேயே எடுத்து முடிக்க இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டு அதன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக அசர்பைஜானின் பல இடங்களில் ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்தக் காட்சிகளில் அஜித், அர்ஜூன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

விடாமுயற்சி படம்: இந்நிலையில் அடுத்ததாக சிறிய அளவில் செட்கள் அமைத்து அஜித், திரிஷா காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி 3ம் வாரத்திற்குள் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. படம் கோடை கொண்டாட்டமாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு மார்ச் மாதத்தில் ஏகே63 படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் இணையவுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *