இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்து; இந்திய விமானம் அல்ல – மத்திய அரசு தகவல்
ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் பயணம் செய்ய பட்டியலிடப்பட்ட வணிக விமானமோ அல்லது இந்திய வாடகை விமானமோ அல்ல என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
‘Moscow-bound chartered flight from India’ crashes in Afghanistan; not an Indian aircraft, clarifies Centre
இந்தியாவிலிருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குச் சென்ற விமானம் ஆப்கானிஸ்தானின் படக்ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் குறைந்தது 6 பேர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், இது 1978-ல் தயாரிக்கப்பட்ட பிரெஞ்சு தயாரிப்பான டசால்ட் ஃபால்கன் 10 ஜெட் (Dassault Falcon 10) விமானம் இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குப் பயணித்த ஒரு ஆம்புலன்ஸ் விமானம்.
அந்த விமானம் இந்தியன் பட்டியலிடப்பட்ட விமானமோ அல்லது பட்டியலிடப்படாத (NSOP)/பட்டய விமானம் அல்ல என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இது ஒரு மொராக்கோவில் பதிவுசெய்யப்பட்ட சிறிய விமானம் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கே உள்ள படாக்ஷானின் தொலைதூர மலைப் பகுதியில் இரவில் விமான விபத்து நடந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து அல்லது உயிரிழப்புக்கான காரணத்தை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.