முழுசா கட்டி முடிக்காத கோவிலை திறக்கலாமா? கனிமொழி சொன்னதும் துர்கா ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்!
சேலம்: ஒரு கோவிலை முழுசாக முடிக்காமல் திறக்கலாமா? முழுசாக கட்டி முடிக்காமல் திறக்க் கூடாது. ஆனால் இன்றைக்கு பாஜக அரசியல் லாபத்திற்காக கோவிலை திறக்கிறார்கள்.
இது எங்க அண்ணி கூட உட்கார்ந்து இருக்காங்க அவுங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும் என்று சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் கனிமொழி எம்பி கூறினார்.
சேலத்தில் இன்று திமுக இளைஞரணி மாநாடு தொடங்கியது. மிக பிரம்மாண்டமாக நடந்து வரும் இந்த மாநாடானது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில், இன்று காலை கனிமொழி எம்.பி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து மாநாட்டில் கனிமொழி எம்பி பேசியதாவது:- ஒரு கோவிலை முழுசாக முடிக்காமல் திறக்கலாமா? திறக்க கூடாதுல்ல.. ஒரு கோவிலை முழுசாக கட்டி முடிக்காமல் திறக்கக் கூடாது. ஆனால் இன்றைக்கு இருக்கும் பாஜக என்ன சொல்கிறது. நாங்கதான் இந்து மதத்தை காப்பற்றுகிறோம்..
நாங்கள் தான் சனாதன தர்மத்தை காப்பாற்றுகிறோம்.. நாங்க தான் கோவிலை காப்பாற்றுகிறோம். அதனால் எல்லா கோவிலையும் எங்க கிட்டயே கொடுத்துருங்க என்று பாஜக சொல்கிறது. ஆனால், கட்டி முடிக்காத கோவிலை திறக்க கூடாது என்பது இந்து மதம். அதை அரசியல் ஆக்கி அரசியல் லாபத்திற்காக இந்துக்களை மதிக்காமல் உணர்வுகளை மதிக்காமல் உங்க ஆட்களே வரமாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு அந்த கோவிலை நாளை திறக்க போகிறீர்கள்.
இதேபோல், ஆனால், இவர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய… எங்க அண்ணி கூட உட்கார்ந்து இருக்காங்க அவுங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். (அப்போது அங்கு அமர்ந்து இருந்த துர்கா ஸ்டாலின் லேசாக சிரித்தார்) ஏனென்றால் கட்டி முடிக்காத கோவிலை திறக்க கூடாதுஎன்பது இந்து மதம்.
அதற்கு விடுமுறை வேற.. இதெயல்லாம் கேளவி கேட்க கூடாது. கேள்வி கேட்டால் நமக்கு ICE வைப்பார்கள். ICE என்றால் என்ன இன்கம் டேக்ஸ், சிபிஐ. அமலாக்கத்தூறை இந்த மூன்றும் வரும். யார் கேள்வி கேட்டாலும் இந்த மூன்றும் தேடி வரும். இவற்றுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது தூத்துக்குடியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
வீடுகள் எல்லாம் அடித்து செல்லப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து பார்வையிட்டார். ஆனால் இதுவரை தென் மாவட்ட மழை பாதிப்பிற்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதி வழங்கவில்லை.