பெங்களூர்: அது என்னங்க காருல.. வெறும் 9000 ரூபாயில் அற்புதம்..!!

பெங்களூரின் மாரத்தஹல்லியில் இருந்து ஹெச்எஸ்ஆர் லேஅவுட்டுக்கு உபர் காரை ஐடி டெவலப்பர் பார்த் பார்மர் புக் செய்துள்ளார்.
அந்த காரின் டிரைவர் டாஷ்போர்டில் ஏதோவொரு வித்தியாசத்தை செய்திருப்பதை பார்த்தார்.பெங்களூரை சேர்ந்த உபர் கார் ஓட்டுநர் துரை, தனது காரில் கியர்களை அடிக்கடி மாற்றுவதால் தோள்பட்டை வலி ஏற்பட்டதால் ஸ்டியரிங் வீல் பின்னால் ஒரு கம்பை சொருகி கியரை மாற்றும் வசதியை செய்துள்ளார். இதனால் அவருக்கு இப்போது தோள்பட்டை வலி ஏற்படுவதில்லை.
இது பற்றி ஐடி டெவலப்பர் பார்த் பார்மர் கூறுகையில், துரை கார் கியர்களை மாற்றுவதால் தோள் வலி ஏற்படுகிறது என்றும் இதற்காக அவரது நண்பர் உதவியுடன் கார் ஸ்டியரிங் வீல் பின்னால் ஒரு கம்பை சொருகி அதன் மூலம் கியர்களை மாற்றுவதால் தோள்பட்டை வலியிலிருந்து நிவாரணம் பெற்றதாகக் கூறினார் என்றார்.இது பற்றி அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள விடியோவில், அந்த கருவி டிரைவர் தனது கார் கியர்களை மாற்றுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்தது என்றும் அதை அவரே வடிவமைத்ததாகவும் இதன் மூலம் அவரது தோள்பட்டை வலி குறைந்துவிட்டதாகவும் விவரித்துள்ளார்.அந்தக் கருவியைப் பொருத்துவதற்கு ரூ.9000 செலவானதாக டிரைவர் துரை கூறியுள்ளார். மிக அசாத்தியமான செயல் அது என்றார். பார்த் பார்மர் கூறுகையில், “வீடு திரும்புவதற்கு நான் ஊபரை முன்பதிவு செய்தேன், இந்த நபர் என்னை அழைத்துச் சென்றார். வீடியோவில் உள்ளதைப் போல இந்த கியர் லீவர் தானாக மாறுவதை நான் கவனித்து, காரை மாற்றியமைத்துவிட்டீர்களா என்று அவரிடம் கேட்டேன். இரண்டு வாரங்களில் மாற்றங்களைச் செய்ததாக துரை கூறினார்.
முன்பு அவரது தோள்பட்டை கியர்களை அதிகமாக மாற்றுவதால் வலி ஏற்பட்டதால், அவரும் அவரது நண்பரும் சில சிப், ரிலேக்கள் மற்றும் மோட்டார் அசெம்பிளி மூலம் ஸ்டீயரிங் பின்னால் உள்ள குச்சியைப் பயன்படுத்தி கியர்களை மாற்றக்கூடிய இந்த பொறிமுறையை உருவாக்கியதாக கூறினார்.இதேபோல் தங்களுக்கும் செய்து தருமாறு துரையிடம் பெங்களூரை சேர்ந்த பலரும் கேட்டுக் கொண்டதாக பார்மரிடம் துரை கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லையாம்.இந்தக் கருவியை நான் இன்னும் சோதனை அடிப்படையில் தான் பயன்படுத்தி வருகிறேன். சில நேரங்களில் நடுவழியில் இந்த குச்சி உடைந்து விடுகிறது. எனவே அதில் வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி செய்தபின்னர் அந்தக் கருவியை தனது பேரில் பேடன்ட் உரிமை வாங்கப் போவதாக துரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக துரைக்கு சில அறிவுரைகளை தந்துள்ளேன். பேடன்ட் இல்லாமல் இந்தக் கருவியை விற்க வேண்டாம் எனக் கூறினேன். இந்தக் கருவி வெற்றி பெற்றால் அது துரைக்கு பல வழிகளிலும் உதவியாக இருக்கும் என்று கூறி ஊக்கப்படுத்தினேன். இது தொடர்பாக தனது உதவி தேவைப்பட்டால் தாராளமாக உதவத் தயார் என்றேன் என்று பார்த் பார்மர் கூறினார்.