அடுத்தமுறை சிக்கனை இப்படி வறுவல் செய்யுங்க.. சும்மா அள்ளும்…

Chicken Roast Recipe In Tamil: இன்று விடுமுறை என்பதால் பலரது வீடுகளில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிடுவோம்.
நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு புதிய ரெசிபியை ட்ரை செய்வீர்களா?
இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு சிம்பிளான வறுவலை முயற்சி செய்து பாருங்கள். இந்த சிக்கன் வறுவல் பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் மிகவும் ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு சிக்கன் வறுவலை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* வரமிளகாய் – 5
* வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2
* உப்பு – சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
* சிக்கன் – 3/4 கிலோ
* நெய் – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை முழுதாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை முழுதாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு சில நொடிகள் கிளறி விட வேண்டும்.
* பின் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து சிக்கனை நன்கு கிளறி, மீண்டும் 10 நிமிடம் வேக வைத்து, நெய் ஊற்றி கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் வறுவல் தயார்.