ஷேவிங் கிரீமுக்கு மாற்றாக இதை பயன்படுத்திப் பாருங்க
ஆனால் இனி டென்ஷன் ஆக அவசியம் இல்ல. ஏனென்றால் ஷேவிங் கிரீமுக்கு மாற்றாக வேறு சில பொருள்களைப் பயன்படுத்தலாம். சூப்பராவும் அழகாவும் இருப்பிங்க!
பேபி ஆயில்: பொதுவாக வீட்டில் குழந்தைகள் யாராவது இருந்தால் அந்த வீட்டில் நிச்சயமாக பேபி ஆயில் இருக்கும். இந்த பேபி ஆயிலை சருமத்தில் அப்ளை செய்து ஷேவ் செய்கிற பொழுது, வழக்கமாக ஷேவ் செய்யும்போது ஏற்படுகிற எரிச்சல், கீறல்கள் ஆகிய எதுவும் உண்டாகாது. அதேபோல் ஷேவிங் மெஷினில் உள்ள பிளேடும் சொரசொரப்பு தன்மை இல்லாமல் மிருதுவாக மாறிவிடும். ஒரு சில துளிகள் இருந்தாலே போதும் மென்மையான ஷேவை பெறலாம்.
ஹேர் கண்டிஷ்னர்: ஷேவிங் க்ரீம் இல்லாமல் ஷேவ் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு அடுத்த பெஸ்ட் சாய்ஸ் நீங்கள் தினமும் தலைக்கு பயன்படுத்துகிற ஹேர் கண்டிஷ்னர் பயன்படுத்தினாலே போதுமானது. இதில் சருமத்தை பாதுகாக்கிற பல உட்பொருள்கள் உள்ளதால் இது உங்களுடைய சருமத்துக்கு நன்மைகளை தரும். சருமத்தை வறட்சி இல்லாமல் நீரோட்டமாக வைத்திருக்கும். மேலும் இது சருமத்தை மிருதுவாகவும் வைத்திருக்கும்.