நடனத்தால் மயக்கும் மைக்கேல் ஜாக்சன்.. உருவாகின்றது அவருடைய பயோ பிக் – அதில் MJவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்தவர் தான் மைக்கேல் ஜோசப் ஜாக்சன். அவரது குடும்பத்தில் ஜாக்சன் எட்டாவது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மிக சிறிய இடத்தில் சாதாரண ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்த மைக்கேல் ஜாக்சன் இன்று உலகமே MJ என்று போற்றும் அளவிற்கு ஒரு மாபெரும் கலைஞனாக மாறியது அனைவரும் அறிந்ததே.

மைக்கேல் ஜாக்சனுக்கு ஆறு வயது இருக்கும் பொழுது அவருடைய தந்தை துவங்கிய ஒரு பேண்டில் இணைந்து பாடல்களை பாட ஆரம்பித்தார். சிறுவயதிலிருந்தே அவருடைய உருவத்திற்காகவும், நிறத்திற்காகவும் பெரிய அளவில் உருவ கேலி செய்யப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

காலங்கள் நகர நகர தனது பாடல்களாலும், நடனத்தாலும் பலரை ஈர்க்க வைத்தார். இந்த சூழ்நிலையில் தான் 1975 ஆம் ஆண்டு அவருக்கு கிடைத்த ஒரு மாபெரும் வாய்ப்பு மைக்கேல் ஜாக்சன் யார் என்பதை உலகறியச் செய்தது. 1977 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் நியூயார்க் நகருக்கு குடி பெயர்ந்தார். அதன் பிறகு தான் அவருடைய பிரபலமான பல பாடல்கள் அரங்கேறியது.

1980களின் முற்பகுதியில் இருந்து இந்த உலகமே மைக்கேல் ஜாக்சனின் நடனத்திற்கு அடிமையாக துவங்கியது. அவர் அமெரிக்கர் என்றாலும் கூட உலகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அவரை தெரியும் வண்ணம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு லண்டன் நகரில் மாபெரும் கச்சேரி ஒன்றில் பங்கேற்று திரும்பிய அவர் ஜூன் 25 2009 அன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து அவருடைய பயோ பிக் ஒன்று தற்போது உருவாக உள்ளது ஹாலிவுட்டில் உள்ள பல முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் மைக்கேல் ஜாக்சன் அவர்களுடைய உறவினரான ஜாபர் ஜாக்சன் என்பவர் தான் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரம் ஏற்று அதில் நடிக்கவுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *