அச்சச்சோ! இந்த வீரர் போனதால் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு காலி.. பீட்டர்சன் எச்சரிக்கை

இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகத்தான் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியது. அதன் பிறகு இந்திய அணி எந்த ஒரு நாட்டிடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை.

இதனால் எப்போதுமே இங்கிலாந்து அணி என்பது இந்தியாவுக்கு ஒரு ஆபத்தை கொடுக்கும் அணியாகவே விளங்குகிறது. இதே போல் இங்கிலாந்து அணி தற்போது பேஸ் பால் என்ற ஒரு அதிரடி ஆட்டத்தை கடைப்பிடித்து வருகிறது.

இந்த யுத்தியை கடைப்பிடித்த பிறகு முதல் முறையாக இந்தியாவுடன் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முக்கிய அதிரடி வீரராக கருதப்படும் ஹாரி புருக் திடீரென்று இந்திய தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 62.15 என்ற அளவில் சராசரி வைத்திருக்கிறார் புருக். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர்களது சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடி பல தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த நிலையில் ஹாரி புருக் விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பீட்டர்சன், ஹாரி குரூப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.

குடும்பம் தான் முதலில் முக்கியம் என்பதை நான் உணர்கிறேன். அதேசமயம் அவருடைய விலகல் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் பேஸ் பால் திட்டத்தில் ஹாரி புருக், ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் ஆக விளங்குகிறார் என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அஸ்வின் குறித்து பேசிய பீட்டர்சன், அஸ்வின் எப்போதுமே ஆப் ஸ்பினராக வீச வந்துவிட்டு திடீரென்று தூஸ்ரா வீசமாட்டார். ஆனால் பந்து வீசுவதற்கு முன்பு அதனை மறைத்து வந்து நமக்கு வீசுவார்.அதனை கணித்து விளையாடுவது அவசியம். அஸ்வின் பந்தை எதிர்கொள்ளும் போது நான் 100% நம்பிக்கையுடன் இருப்பேன். அவர் பந்தை மறைத்து வந்து வீசும் போது அது துஸ்ராவாக தான் இருக்கும் என்பதை கணித்து நான் விளையாடுவேன் என்று அஸ்வினை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து வீரர்களுக்கு பீட்டர்சன் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *