குதிகால் வலி, பாத எரிச்சலா வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க!
பித்தம் அதிகமாக இருந்தாலும் சரி குதிகால் வலி வரும்.நாம் கால்சியம் சத்து மற்றும் இரும்பு சத்து எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மூலமாக கூட நமக்கு கால் வலி அதிகமாக ஏற்படுகின்றது.
இதை சாப்பிட்ட பத்து நிமிடத்தில் உங்களின் குதிக்கால் வழி பாத வலி பாத எரிச்சல் ஆகியவை உடனடியாக சரியாகிடும். அதற்கான மருத்துவத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம்.
கால் வலி பாத வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதிகமான உடல் எடையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல உடம்பில் கால்சியம் சத்து குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரி பாத எரிச்சல் குதிகால் வலி ஏற்படுகிறது.
அதை வீட்டிலேயே பத்து நிமிடத்தில் சரி செய்யக்கூடிய அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. வெற்றிலை இரண்டு
2. கசகசா ஒரு சிட்டிகை
3. வெந்தயம் 10
4. சீரகம் சிறிதளவு
5. கல் உப்பு இரண்டு
செய்முறை:
முதலில் குதிகால் வலிக்கு தேவையான மருத்துவத்தை பார்க்கலாம்.
1. ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கழுவி கொள்ளுங்கள். அதன் காம்பு பகுதியையும் நுனி பகுதியையும் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இப்பொழுது வெற்றிலையின் நடுவே சிறிதளவு கசகசா, பத்து வெந்தயம், சிறிதளவு சீரகம் ஆகியவற்றை போட்டு நன்றாக மடித்துக் கொள்ளுங்கள்.
3. இந்த வெற்றிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு நன்றாக மென்று முதலில் வரும் உமிழ்நீரை துப்பி விடுங்கள். அதனை மெதுவாக நின்று விழுங்கவும். கடைசி வரும் சக்கயை துப்பி விடுங்கள்.
பாத எரிச்சலுக்கு அதே போன்று
ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கழுவி கொள்ளுங்கள். அதன் காம்பு பகுதியையும் நுனி பகுதியையும் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இப்பொழுது வெற்றிலையின் நடுவே உப்பு கல் 2, பத்து வெந்தயம், இரண்டையும் போட்டு நன்றாக மடித்துக் கொள்ளுங்கள்.
இதை சாப்பிட்ட பத்து நிமிடத்தில் உங்கள் குதிகால் வலியும் பாத எரிச்சலும் பறந்து விடும்.