இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. எத்தனை மணிக்கு தெரியுமா?
இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி 7 நாள் பூஜைகள், சடங்குகள் கோவிலில் தொடங்கியது. கடந்த 17 ம் தேதி கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை தான் இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இன்று நடக்கும் கும்பாபிஷேக விழாவுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
இன்று மதியம் 12.05 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. கும்பாபிஷேகம் என்பது மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடைபெற உள்ளது.
இதில் 12.29 நிமிடம் 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில் குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரதிஷ்டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.