ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை மாற்றுவது எப்படி தெரியுமா?
பல்வேறு அரசு சேவைகளுக்கு அத்தியாவசியமான டாக்குமெண்ட்களில் ஒன்றாக ஆதார் அட்டை தற்போது கருதப்படுகிறது. ஆதார் அட்டையில் புகைப்படம் இருப்பதால் அது அடையாள சான்றிதழாகவும், முகவரி சான்றிதழாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை போட்டோ உட்பட எந்த நேரத்திலும் அப்டேட் செய்து கொள்ளலாம். அந்த வகையில் உங்களது ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை எப்படி அப்டேட் செய்வது என்பது குறித்த சில விவரங்களை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
உங்களது ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கு நீங்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை அப்டேட் செய்ய நீங்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும். பயோமெட்ரிக் மற்றும் புகைப்பட அப்டேட்டுகளை ஆன்லைனில் செய்வது சாத்தியமில்லை.
ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி?
உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய நிரந்தர ஆதார் சேவை மையத்திற்கு செல்லுங்கள்.
ஆன்லைனிலோ அல்லது ஆதார் சேவை மையத்திலோ கிடைக்கக்கூடிய என்ரோல்மென்ட் படிவத்தை (Enrollment form) நீங்கள் நிரப்ப வேண்டும்.
படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பிய பிறகு அதனை சமர்ப்பிக்கவும்.
ஆதார் சேவை மையத்தின் நிர்வாகி உங்களுடைய புகைப்படத்தை எடுத்துக் கொள்வார்.
பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வதற்கு நீங்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
புதிய புகைப்படத்துடன் கூடிய அப்டேட் செய்யப்பட்ட ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?
UIDAI -இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் லாகின் செய்து கொள்ளுங்கள்.
ஹோம் பேஜில் உள்ள ‘மை ஆதார்’ (My Aadhaar) செக்க்ஷனில் காணப்படும் ‘டவுன்லோட் ஆதார்’ (Download Aadhaar) ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இ-ஆதார் டவுன்லோட் செய்வதற்கு ‘ஆதார் நம்பர்’ (Aadhaar Number), ‘என்ரோல்மெண்ட் ஐடி’ (Enrolment ID) மற்றும் ‘வெர்ச்சுவல் ஐடி’ (Virtual ID) போன்ற முறைகளில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் தேர்வு செய்த ஆப்ஷனின் அடிப்படையில் தேவையான விவரங்களை இப்பொழுது என்டர் செய்யுங்கள்.
உங்களது பதிவு செய்யப்பட்ட போன் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படுவதற்கு முன்பு நீங்கள் ஒரு கேப்சா (CAPTCHA) கோடை வெரிஃபை செய்ய வேண்டும்.
செயல் முறையை அங்கீகரிக்க உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-யை என்டர் செய்யுங்கள்.
பாஸ்வேர்டு மூலமாக பாதுகாக்கப்பட்ட இ-ஆதார் உங்களது சாதனத்தில் இப்பொழுது டவுன்லோடு ஆகிவிடும்.
UIDAI -இன் படி, உங்கள் பெயரில் உள்ள முதல் நான்கு எழுத்துக்கள் (கேப்பிடல் எழுத்துகளில்) மற்றும் உங்களது பிறந்த வருடம் இ-ஆதாரை திறப்பதற்கான பாஸ்வோர்ட் ஆகும்.