பூரி மொறு மொறுனு நல்லா உப்பி வரனுமா..? அதுக்கு இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் டிபன் உணவுகளில் ஒன்று ‘பூரி’. ஆனால் அனைவரும் பூரியை சூடாக மொறு மொறு என்று தான் சாப்பிட விரும்புவார்கள்.பொதுவாக அனைவரது வீடுகளிலும் கோதுமை மாவில் தான் பூரி செய்வார்கள்.

ஆனால் இங்கே நாம் பார்க்கப்போகும் ரெசிபியில் ரவாவை வைத்து எப்படி குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு பூரி செய்யலாம் என்று தான்.

தேவையான பொருட்கள் :

மைதா – 1 கப்

மெல்லிய ரவை – 1 கப்

பால் – 1/2 கப்

நெய் – 1/4 கப்

எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் சுத்தம் செய்த ரவை மற்றும் மைதாவை சேர்த்த கொள்ளவும்.

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உறுக்கிக்கொள்ளவும்.

தற்போது உறுக்கிவைத்துள்ள நெய்யை மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரெட் தூள் பதத்திற்கு கலந்து கொண்டுவரவும்.

பின்பு அந்த மாவில் தேவைக்கேற்ப பாலை சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

குறிப்பு : தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் பிசைந்து கொள்ளலாம்.

இப்போது பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு 15 நிமிடங்களுக்கு லேசான ஈரத்துணி போட்டு மூடி ஊறவிடவும்.

மாவு ஊறிய பின் பூரிக்கு தேவையான அளவு மாவை எடுத்து உருண்டையாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து சிறிது கனமான தேய்த்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு பொரித்து கொள்ளவும்.

பூரி இருபுறமும் பொன்னிறமாக வெந்தவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து சூடான மொறு மொறு ரவா புரியை அனைவருக்கும் பரிமாறுங்கள்…

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *