முட்டையை சரியான பதத்தில் வேக வைக்க தெரியுமா..? இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க..!
முட்டை சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது.? அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது.
முட்டை நன்மைகள் :
முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளது.
எனவே இதை தினமும் சாப்பிடுவதால் நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது. வேக வைத்த முட்டையை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்குவதாக கூறப்படுகிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் இரும்புச்சத்து வளமான அளவில் உள்ளது. மேலும் வேக வைத்த முட்டைகளை உண்பது ஸ்டாமினாவை அதிகரிக்கவும் உதவுகிறது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய முட்டைகளை சரியாக வேக வைப்பதும், அதிலிருந்து ஓடு உரிப்பதும் சிலருக்கு கடினமான வேலையாக உள்ளது.
முட்டையை சரியாக வேக வைக்கும் முறை :
முட்டையை சரியாக வேக வைக்க வேண்டும் என்றால் அதை வேக வைக்கும் போது தண்ணீரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் முட்டைகளை 10 நிமிடங்களுக்கு மேல் வேகவைக்க கூடாது என்று கருத்தில் கொள்ளுங்கள். இது முட்டை ஓட்டில் விரிசல்களைத் தடுக்க உதவுகிறது.
தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து முட்டைகளை வேக வைத்தால் முட்டை ஓட்டில் விரிசல் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.
பொதுவாக நன்கு வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி பச்சை வளையம் இருக்காது. அதன் உட்புறம் கிரீமி மற்றும் மென்மையாக இருக்கும்.
முட்டை ஓட்டை சரியாக உரிக்கும் முறை :
முட்டையை மெதுவாக உடைத்து பின்னர் நம் உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்து தேய்த்தாலும் எளிதாக ஓட்டை உரிக்கலாம்.
முட்டைகளை வேகவைத்து எடுத்த உடனே உரிக்காமல் அது முழுவதும் குளிர்ந்த பிறகு மெதுவாக உடைத்து உரித்தால் ஓடு எளிதாக உரிக்க வரும்.
பொதுவாக ஒரு வாரம் ஃபிரிட்ஜில் வைத்த முட்டைகள் புதிய முட்டைகளுடன் ஒப்பிடும்போது ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.