#JUST IN : முழு வீடியோ உங்களுக்காக… 5 வயது பாலகனாக அருள்பாலிக்கும் ராமர்.!
ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா அயோத்தி மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அயோத்தியில் ஒவ்வொரு நூறு மீட்டர் தொலைவுக்கு ஒரு மேடை என அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ராமர் பாடல்கள் ஒலித்தபடி, அயோத்தி நகருக்குள் இருப்பவர்கள் அனைவரும் ராமரின் தலைநகரான அயோத்திக்குள் இருப்பதை உணர்வுப்பூர்வமாக உணரும் வகையில் அந்த இசை நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பால ராமரின் சிலை பிரதிஷ்டை விழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அயோத்தியில் சிறப்பு பூஜைகள் செய்து ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மலர்தூவி சிறப்பு வழிபாடு செய்தனர்.
ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில், தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளன.கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்படும்.ராமா் கோயிலில் ஜனவரி 23-ஆம் தேதிமுதல் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். ஒரு நாளைக்கு 3 லட்சம் போ வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது.