தஞ்சம் புகுந்த மியான்மர் வீரர்கள்.. திருப்பி அனுப்பும் இந்தியா..!!
அன்னை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து பல ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதில் சமீபத்தில் நடந்த தீவிர தாக்குதலால் உயிருக்கு பயந்த மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர்.
கடந்த வாரம் சுமார் 600 ராணுவ வீரர்கள் இந்தியாவின் மிசோரமில் அடைக்கலம் புகுந்தனர். அசாமில் உள்ள ரைபிள் முகாமில் அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் மியான்மர் நாட்டிற்கு வீரர்களை பத்திரமாக அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக இன்றும் நாளையும் 276 ராணுவ வீரர்கள் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
மீதமுள்ள ராணுவ வீரர்களும் விரைவில் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.