தமிழ்நாட்டில் சிறப்பு பூஜை அன்னதானத்துக்கு தடையில்லை..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோயிலில், தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, மரக்கன்று நட்டுவைத்த நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யவிடாமல் காவல்துறை மூலம் தடுப்பதாக மீண்டும் குற்றஞ்சாட்டினார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் திறப்பின் போது தமிழ்நாட்டில் சிறப்பு பூஜை, அன்னதானத்துக்கு தடையில்லை என தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில், தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.