அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை : சிறப்பு பிரசாத பெட்டியில் என்னென்ன பொருட்கள் உள்ளது தெரியுமா?

மிகவும் எதிர்பார்கக்ப்பட்ட அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ரூ.1800 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கருவறையில் 51 அடி அங்குலபால ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார். தொடர்ந்து புதிய ராமர் சிலைக்கு பிரதமர் மோடி பூஜைகளை செய்தார். பின்னர் மோடி ஸ்ரீ ராமரிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார்.

பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டினார். அப்போது உ.பி ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோரும் வழிபாடு செய்தனர்.

ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அபிஷேக் பச்சன், சந்திரபாபுநாயுடு, சச்சின் டெண்டுல்கல், சாய்னா நேவால், மித்தாலி ராஜ், விவேக் ஓபராய் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர்.

ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு பிரசாத பெட்டிகள் வழங்கப்பட உள்ளன. அதில் என்னென்ன இருக்கின்றன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இரண்டு நெய் மாவா லட்டுகள், குர் ரேவடி, ரம்தானா சிக்கி, அக்ஷதை, துளசி விதை, ஒரு ராமர் விளக்கு மற்றும் ஏலக்காய் விதைகள் ஆகியவை கூடுதலாக, விருந்தினர்கள் தேசி நெய்யில் சமைத்த ‘சாத்விக்’ உணவைக் கொண்ட மகாபிரசாதம் வழங்கப்பட உள்ளது.

கோயில் அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் கீழ் குஜராத்தைச் சேர்ந்த பாரதி கர்வி குஜராத் மற்றும் சந்த் சேவா சன்ஸ்தான் ஆகியோரால் பிரசாதம் மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *