குடும்பங்கள் கொண்டாடும் ஷாருக்கானின் ‘டங்கி’.
ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா ‘டங்கி’ வார இறுதியில் 40% – 50% கூடுதலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாகவும், விழாக்காலத்தில் குடும்பங்கள் கொண்டாட்டத்திற்கு தேர்ந்தெடுக்கும் படமாக ‘டங்கி’ அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘டங்கி’ திரைப்படம் இறுதியாக உலகம் முழுவதும் பெரிய திரைகளில் வெளியாகி, பார்வையாளர்களின் இதயங்களை ஆட்சி செய்யத் தொடங்கி விட்டது. இத்திரைப்படம் இதுவரை 30 கோடியை வசூலித்திருந்தாலும், முதல் நாளில் இருந்ததை விட வார இறுதியில் 40% – 50% அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. வெள்ளிக்கிழமையை விட சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது குடும்பங்கள் குதூகலமாக ‘டங்கி’ திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, நல்ல உள்ளடக்கத்துடன், குடும்ப பார்வையாளர்களை கவரும் அனைத்து அம்சங்களுடன் வெளியாகியுள்ள “டங்கி” திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக மாறியுள்ளது உள்ளது.